மும்பையில் சிகிச்சைக்கு வந்த இளம்பெண் நோயாளியை கற்பழித்துவிட்டு டாக்டர் ஓட்டம் !




old-girlமும்பை புறநகர் பகுதியில் உள்ள கிளினிக் ஒன்றில் சிகிச்சை பெற வந்த 26 வயது இளம்பெண்ணை மருத்துவர் ஒருவர் கற்பழித்துவிட்டு தப்பியோடிவிட்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கிழக்கு பகுதியில் உள்ளது கட்கோபர். அந்த பகுதியைச் சேர்ந்த 26 வயது திருமணமான இளம்பெண் ஒருவர் சிகிச்சை பெறுவதற்காக கார் பகுதியில் உள்ள கிளினிக் ஒன்றுக்கு சென்றார். அப்போது மருத்துவர் அவரை கற்பழித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பெண் நடந்தது குறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.




இது குறித்து அப்பெண்ணின் கணவர் கூறுகையில்,

அந்த மருத்துவர் எனக்கு பணம் கொடுத்து விஷயத்தை யாருக்கும் தெரியாமல் மறைக்க முயன்றார். ஆனால் நான் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தேன். போலீசார் மருத்துவரை தங்கள் வாகனத்தில் அழைத்துச் செல்லாமல் அவரின் காரில் வர அனுமதித்தனர்.

ஆனால் மருத்துவர் காவல் நிலையத்திற்கு செல்லாமல் தப்பிவிட்டார் என்றார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் மருத்துவரை உடனே கைது செய்யக் கோரி மக்கள் நேற்று காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர்.