
நடிகை பத்மபிரியா தமிழில் கடைசியாக பொக்கிஷம் படத்தில் நடித்தார். 2009-ல் இப்படம் வந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தங்கமீன்கள் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தைகவுதம்மேனன் தயாரிக்கிறார். ராம் இயக்குகிறார்.இவர் ஏற்கனவே கற்றது தமிழ் படத்தை டைரக்டு செய்தவர். தங்க மீன்கள் படத்தில் இவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். சாதனா,
ஷெல்லி கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. டைரக்டர்கள் பாலு மகேந்திரா, லிங்குசாமி, கவுதம், பிரபு சாலமன், சேரன், வெற்றிமாறன், இசையமைப்பாளர்கள் யுவன்சங்கர் ராஜா, அனிருத் பங்கேற்றனர். லிங்குசாமி வெற்றி மாறன் பேசும் போது இயக்குனர் ராம் இந்த படத்தின் கேரக்டருக்கு மிக பொருத்தமாக உள்ளார் என்றார்.இந்த படத்தின் டிரெய்லர் தனக்கும் தன் மகளுக்கும் இடையே நிகழ்ந்த சம்பவங்களை நினைவூட்டுகிறது என்று பிரபுசாலமன் தெரிவித்தார். தந்தை மகள் இடையிலான பாச உணர்வை சித்தரிக்கும் கதையம்சத்தில் இப்படம் தயாராகியுள்ளதாக இயக்குனர் ராம் தெரிவித்தார்.