நித்யா மேனன் ஒரு திமிர் பிடித்த அழகி: சேரன்


தான் இயக்கிய நடிகைகளிலேயே நித்யா மேனன் ஒரு திமிர் பிடித்த அழகி என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.
இயக்குனரும், நடிகருமான சேரன் ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை என்ற பெயரில் புதிய படமொன்றை இயக்கி வருகிறார்.

இதில் சர்வானந்த் நாயகனாகவும், நித்யா மேனன் நாயகியாகவும் நடிக்கின்றனர். நகைச்சுவை வேடத்தில் சந்தானம் நடிக்கிறார்.

இதுகுறித்து சேரன் கூறுகையில், எனக்கு கிராமத்து படங்கள் தான் வரும் என்ற நினைப்பை மாற்றுவதற்காக இந்த படத்தை மாடர்னாக எடுத்துள்ளேன்.

சில நடிகர்கள் ஆங்கிலத்தில் கதை சொன்னால் தான் கால்ஷீட் தருகிறார்கள். அவர்கள் முன்பு என்னை நிரூபித்துக் காட்டவே இந்த படத்தை எடுக்கிறேன்.

நான் இயக்கிய நாயகிகளில் நித்யா மேனன் ஒரு திமிர் பிடித்த அழகி.

கதாபாத்திரமாகவே மாறி உணர்ச்சிகளை அற்புதமாக முகத்தில் கொண்டு வருபவர் நித்யா என்றும் சேரன் புகழாரம் சூட்டியுள்ளா

படப்பிடிப்பில் அஞ்சலியை சந்திக்க உறவினர்களுக்கு தடை


படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அஞ்சலியின் அனுமதியின்றி உறவினர்கள் வரக்கூடாது என தடை போடப்பட்டுள்ளது.
தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு சென்ற அஞ்சலி, கடந்த 8ஆம் திகதி திடீரென மாயமானார்.

இதனையடுத்து அவரது சித்தி பாரதிதேவி மற்றும் இயக்குனர் களஞ்சியம் மீதும் குறை கூறியிருந்தார்.

மாயமான அஞ்சலியை மீட்டுத்தரக் கோரி சித்தி பாரதிதேவி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இதனால் ஐந்து நாட்களுக்கு பிறகு, ஐதராபாத் பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார்.

என்னை யாரும் கடத்தவில்லை. மன வேதனையால் ஓட்டலை விட்டு வெளியேறினேன்.

இனி நான் என் இஷ்டத்திற்கு செயல்படுவேன். எனது வாழ்க்கையை நானே முடிவு செய்வேன் என, தெரிவித்திருந்தார். அதற்காக தனது குடும்பத்தாருடன் சமாதானம் பேசியுள்ளார்.

இதையொட்டி அவர் நடிக்கும் “போல் பச்சன் போல் தெலுங்கு ரீ மேக் படத்தின் படப்பிடிப்பில் மூன்று நாட்களாக நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள பஞ்சாக்னி என்ற இடத்தில் நடந்து வருகிறது.

காமெடி காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அஞ்சலிக்கு தனி கேரவன் வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நட்சத்திர ஓட்டலில் தங்கி படப்பிடிப்பிற்கு சென்று வருகிறார்.

அஞ்சலி விரும்பினால் அன்றி அவரை யாரும் தனியாக சந்தித்து பேச படப்பிடிப்பு நிர்வாகி அனுமதிக்கவில்லை.

படப்பிடிப்பு முடியும் வரை அஞ்சலியை உறவினர், நண்பர்கள் என சொல்லிக்கொண்டு யாரும் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுகுறித்து அஞ்சலி தரப்பில் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் பாடகி ஜானகி


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட பல இந்திய மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர் பாடகி ஜானகி.
பல பாடல்களைத் தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருது பெற்ற இவர் இன்று தனது 74வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் 1938 ஏப்ரல் 23 ம் திகதி பிறந்த இவர் சிறு வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார்.
நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். சென்னைக்கு இடம்பெயர்ந்த ஜானகி ஏவிஎம் ஸ்டூடியோவில் இணைந்து திரைப்படத்துறையில் நுழைந்தார்.
1957ம் ஆண்டில் வெளிவந்த விதியின் விளையாட்டு என்ற படத்தில் இடம்பெற்ற பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் இவரது முதல் பாடல் ஆகும்.
அடுத்த நாளே அவருக்கு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. "எம்எல்ஏ" என்ற பட்டத்தில் நீயாசா அடியார் என்ற பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.
இதைத் தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்புக் கிட்டியது. 25 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், கொங்கினி, துளு, சௌராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடினார்.
1992ம் ஆண்டில் இலங்கை சென்றிருந்த போது இவருக்கு ஞான கான சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப்பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். மௌனப் போராட்டம் என்ற தெலுங்குப் படத்திற்கு முதன் முதலில் இசையமைத்திருக்கிறார்.
இவர் பெற்ற விருதுகள்

1986 இல் தமிழ்நாடு அரசின் கலை மாமணி விருது
2002 இல் கேரளா மாநில சிறப்பு விருது
1980 இல் மலையாளப் படம் ஒன்றிற்கும், 1984 இல் தெலுங்குப் படம் ஒன்றிற்கும் தேசிய விருது
14 முறை கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
7 தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருது
10 ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
தேசிய விருதுகள்
நான்கு தடவைகள் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதுகள் கிடைத்தன.

1976, பதினாறு வயதினிலே படத்தில் செந்தூரப் பூவே பாடல்
1980, ஒப்போல் மலையாளத் திரைப்படத்தில் எட்டுமனூரம்பழத்தில் பாடல்
1984, சித்தாரா தெலுங்குப் படத்தில் வென்னெல்லோ கோடாரி அந்தம் பாடல்
1992, தேவர் மகன் படத்தில், இஞ்சி இடுப்பழகா பாடல்

வாழ்க்கை அழகானது… காதலிப்பவர்களுக்கு !!


                     
காதல்…. இந்த வார்த்தையை வாசிக்கும் போதே சிலருக்கு உற்சாகம் பீறிடும். சிலருக்கு வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்கும். எண்ணற்ற நபர்களுக்கு அற்புதங்களையும் மாயஜாலாங்கள் நிகழ்த்தக்கூடியதுதான் காதல்.
காதல் ஒருமுறைதான் வரும் என்பதெல்லம் ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தை. வயிற்றில் உணவு இல்லாத போது பசி எடுப்பது போல மனதிற்கு உற்சாகமும் நம்பிக்கையும் தரும் ஒருவர் வந்து சேரும் போதெல்லாம் காதல் வரும் என்கின்றனர் அனுபவசாலிகள்.
பதின் பருவம் தொடங்கி பாடையில் போகும் வரை எல்லா கால கட்டங்களிலும் பல்வேறு நபர்களிடம் பலவிதங்களில் காதல் வருமாம். ஆனால் பலரும் மனதில் அரும்பிய காதலை வெளியே காட்டுவதில்லையாம்.
காதல் வரும் போது அதை வெளிப்படுத்திவிட்டால் மனதில் பாரங்கள் இருக்காது. அதை மறைக்க மறைக்கதான் அழுத்தம் அதிகமாகி ஒருநாள் வெடித்து சிதறிவிடும்.
எதற்காக காதலிக்கிறீர்கள் என்று கேட்டால் அவள் அல்லது அவன் கிடைத்தால் என்னுடைய வாழ்க்கை சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருக்கும் என்று கூறுவார்கள். ஆனால் இது முற்றிலும் சுயநலமான வார்த்தை என்பதை யாரும் உணர்வதில்லை.
காதல் என்பது விட்டுக்கொடுத்தல், தான் விரும்பும் நபர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுதல், தன்னை விட தான் விரும்பும் நபர் நலமாக இருக்கவேண்டும் என்றுதான் காதலிப்பவர்கள் நினைக்கவேண்டுமே தவிர தன்னுடைய நலனுக்காக காதலிப்பவர்கள் தோற்றுத்தான் போகின்றனர். எனவேதான் சுயநலவாதிகள் எல்லோருக்கும் தோல்வியை பரிசாக அளிக்கிறது காதல்.
காதலியோ மனைவியோ கவனிக்காவிட்டால் கைவிட்டு போய்விடுவார்கள். எனவே காதலிப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட முக்கியம் அவர்களை கவனிப்பது. இன்றைக்கு செல்போன், இமெயில் என எத்தனையோ வசதிகள் வந்துவிட்டன. நிமிடத்திற்கு நிமிடம் தொடர்பில் இருக்கமுடியும். எனவே நேரமில்லை என்ற காரணத்தைக் கூறி கண்டுகொள்ளாமல் விட்டு விடாதீர்கள்.
திருமணம் முடிந்த உடன் காதல் முடிந்து போவதற்கான காரணம் நிறைய பேருக்கு புரிவதில்லை. காதலிக்கும் போது கமிட்மென்ட் கிடையாது. காதலர்கள் திருமணம் முடிந்த உடன் தம்பதியர்களாக மாறிவிடுகின்றனர். அவர்களுக்கு பொறுப்புகள் கூடிவிடுகிறது. பணம் சம்பாதிப்பது தொடங்கி குடும்பம், குழந்தை என சமூக பொறுப்புக்களோடு வாழ வேண்டியுள்ளது.
இதனால்தான் காதலிக்கும் போது கிடைத்த இன்பத்தை ஒப்பிட்டுப் பார்த்து திருமணத்திற்குப் பின்னர் காதலர்கள் சண்டையிட்டுக்கொள்கின்றனர். எனவே காதல் வேறு கல்யாணம் வேறு என்பதை புரிந்து அதற்கேற்ப காதலிப்பவர்கள் மட்டுமே வெற்றியினை பரிசாக பெருகின்றனர் என்கின்றனர் அனுபவசாலிகள்.
அதனால்தான் ஒவ்வொரு நிமிடமும் காதலை காதலோடு ரசித்து அனுபவிப்பவர்களுக்கு வாழ்க்கை அழகானது என்கி

பெண்களின் ஜி ஸ்பாட்…. அதிரவைக்கும் ஜி ஷாட் !!

ஆர்கஸம் சரியாக இருக்கவேண்டும் என்பதற்காக பலரும் என்னென்னவோ செய்கின்றனர். சத்தான உணவு, கிளர்ச்சியான பேச்சு, செயல்பாடுகள் இருந்த போதிலும் ஆர்கஸம் சரியில்லை என்று அலுத்துக்கொள்கின்றனர் பெண்கள். இதுபோன்றவர்களை குறிவைத்து ஜி ஷாட் என்ற ஊசி சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது பெண்களின் ஜி ஸ்பாட்டை பெரிதாக்கி ஆர்கஸத்தை அதிகரிக்குமாம்.செக்ஸ் உலகில் ஜி ஸ்பாட் என்ற வார்த்தையைப் பிரயோகிக்காத வாயே இல்லை இன்று. அது உண்மையா கற்பனையா என்று கூட இதுவரை யாராலும் தெளிவாக வரையறுக்க முடியவில்லை இருந்தாலும், இதுதான், இதேதான் என்று ஒரு ஏரியாவை மனதில் நினைத்து அனைவரும் வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுகிறார்கள்.அந்த ஜி ஸ்பாட்டில் ஜி ஷாட் எனப்படும் ஊசியைப் போட்டுக்கொண்டால் ஒரு பழைய பத்து பைசா நாணயம் அளவுக்கு தற்காலிகமாக பெரிதாகி விடுகிறதாம். இதன் மூலம் கூடுதல் இன்பம் அனுபவிக்க முடியுமாம். அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்த ஜி ஷாட் ஊசி பற்றிதான் பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இதுவரை 2000க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த ஊசியைப் போட்டுக் கொண்டுள்ளனராம்.இந்த ஊசியின் விலையானது 800 பவுண்டுகள் தான். அரை மணி நேரத்தில் ஊசி போடும் வேலை முடிவதால் பெண்களிடையே இதற்கு ஏக டிமாண்ட். ஊசி போட்ட பின்னர் பெண்களின் உறுப்புப் பகுதியில் உள்ள ஜி ஸ்பாட்டானது விரிவடைந்து கூடுதல் இன்பத்திற்கு வழி வகுக்கிறதாம். இதைக் கேள்விப்பட்ட லாஸ் ஏஞ்சலெஸ் பெண்கள் இந்த ஊசியைப் போட அலை மோத ஆரம்பித்துள்ளனராம்.இது பற்றி கருத்து கூறியுள்ள மகப்பேறு மருத்துவரும், அறுவைசிகிச்சை நிபுணருமான டேவிட் மெட்டலாக், இந்த ஜீ ஷாட் ஊசியை போட்டுக்கொள்வதன் மூலம் பெண்கள் முன்பை விட உற்சாகமாக இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் ஊசி போடும் மருத்துவமனையில் வாரா வாரம் ஒரு விளக்க வகுப்பையும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஊசி அறிமுகமாகி விட்டாலும் கூட சமீப காலமாகத்தான் இதற்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளதாம். இந்த ஊசியைப் போட்ட பல பெண்களும், தங்களது செக்ஸ் வாழ்க்கை முன்பை விட படு உற்சாகமாக இருப்பதாக கூறியுள்ளனர்.இந்தியாவிலும் வெகு விரைவில் ஜி.ஷாட் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

உதயம் என்.எச்.4 திரை விமர்சனம்

கலைஞர் கருணாநிதி இந்த படத்தின் வெளியீட்டு மூலம் ஒரு சந்தோஷம் அடைவார் ஆமா தன் மகன்கள் ஸ்டாலினும், அழகிரியும் ஒரு சைட்ல முட்டி கொண்டு இருந்தாலும், அவங்க பிள்ளைங்க ஒருத்தர் தயாரிச்ச படத்தை இன்னொருத்தர் வெளியிடறது மகிழ்ச்சி தானே – எந்த மகன்களின் பாசமோ / சண்டையோ பொய்யுனு தெரியலை…..சரி படத்திற்க்கு வருவோம்முதல்ல ஒரு டைட்டில் போடுறாங்க ” இந்த படத்தில் வரும் முறையை போலீஸார் கையாளுவதில்லைனு” அதிலே உற்சாகம் தொற்றி கொள்கிறது ஏதோ வில்லங்கமான மேட்டருன்னு ………….18 வயசுக்கு கீழே பொண்ணுகள், பசங்கள், குடி, டிரக்ஸ், போதை சிகரட்ட்ன்னு கஸ்தூரி ராஜாவின் துள்ளுவதோ இளமை படத்தை ரீமேக் பண்ணின மாதிரி படம்……..இதிலே கூட படிக்கும் சித்தார்த் தான் ஹீரோ,அவருக்கு மட்டும் 18 இல்லை, அதெப்படின்னு
கேக்குறவங்களுக்கு ஒரு சின்ன பிட்டை போடுறாங்க அதாவது அவர் சென்னையில படிக்கும் போது பிரச்சினையாம் அதனால் பெங்களூர் வந்து முதல்ல இருந்து படிக்கிறாராம்……. அதனால் அவர் மேஜர் அவர் லவ் பண்ணும் பொண்னுக்கு 17 முக்கால் வயசு.வழக்கம்போல் பெத்த அரசியல்வாதி பொண்ணு இந்த ஹீரோயின் – ஆடுகளம் தபஸி போல எங்கிட்டு இருந்தோ ஒரு மினி நமீதாவை பிடிசிக்கிட்டு வந்திருக்காங்க, இவரை ஒன்னு ரசிகர்களுக்கு ஓஹோன்னு பிடிக்கும் இல்லை அடுத்த படமே கஷ்டம், ஆனா நடிப்பு தான் கஸ்டம் வரவே மாட்டேங்குது , படத்தில முக்கால் வாசி டயலாக் கன்னடம், ஏன்னா பெங்களூர் பொண்ணாம், இந்த காதலுக்கு வழக்கம் போல அப்பா எதிர்ப்பு காட்ட அங்கிருந்து 18 வயசு கரெக்டா காலேஜ் முடியிற அன்னைக்கு வருதாம் அதனால பொண்ண தூக்கிகிட்டு பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஹீரோ போவது தான் கதை,ஆனா 100 கிலோமீட்டர் கூட போகலை வழக்கம் போல ஆந்திரா குப்பத்தில கதை அப்புறம் தான் தெரிகிறது இந்த படம் தெலுங்கிலும் வரும் ஸ்ட்ரெயிட் படம் என்பதால்….. நல்ல வில்லன் ஒருவரை இந்த படத்தில் அறிமுகபடுத்தியிருக்காங்க அது யாருன்னா ஏபிசிடி படத்தில பிரபுதேவாவின் முன்னால் நண்பன் அந்த் நடன‌ கம்பெனி வச்சிருப்பாரே அவர் தான் – நல்ல பாடி லேங்குவேஜ் மற்றும் நடிப்பு மும்பாய் காரர் போலவே இல்லை – அவர் ஒரு போலீஸ் அதிகாரி – ஒரு ஃபேக் என்கவுன்ட்டர் பண்ணி அதை இந்த ஹீரோயின் அப்பா காப்பாத்துகிறார் அதனால் அவரின் மகளை கடத்தின ஹீரோவை புடிச்சி தரும்படி அவரை அனுப்புகிறார். இதையடுத்து பெங்களூர் அரம்பிச்சு ஹஸ்கோட்டை வழியா பங்காருபேட்டை போய் குப்பம் வந்து அவ்வளவு தான் படம்……!ஒரு நல்ல கதை ஆனா மொக்கை ஸ்க்ரீன் ப்ளே அதுவும் வெற்றி மாறன் மற்றும் இயக்குனர் மணி மாறன் சேர்ந்து செய்த ஸ்க்ரீன் பிளேவாம், லாஜிக் பெரிய ஓசோன் ஓட்டை போல், கதையை உன்னிப்பா கவனித்தா செம காமெடியா இருக்கும்,அதாவது ஆரம்பிக்கும் போது மூணுமாசம் முன்னாடினு போட்டு முதல் நாள் காலேஜை காட்டுவாங்க, ஆனா ஹீரோயினை கடத்தும் போது இஞ்சினியரிங் முடிக்கும் நாலாவது வருஷம் கடைசி நாள்னு காட்டுவாங்க, வாய்ஸ் டிராக்கர்னு ஒரு இருட்டு கடை அல்வா கிண்டியிருக்காங்க…. கொஞ்ச டெக்னாலஜி தெரிஞ்சவங்க சும்மா சிரி சிரினு சிரிக்கலாம்……..காலேஜ் பசங்களுக்கு முதல் பாதி பிடிக்கும் ஆனா மத்த பொதுசனத்துக்கு ஹூம் நான் வரலை அந்த விளையாட்டுக்கு………ஒரு பாட்டு சூப்பர் – ரீ ரிக்கார்டிங் / எடிட்டிங் / கேமரா எல்லாம் எல்கேஜி ரகம்……!.

ஹன்சிகாவுக்கு போட்டியான காஜல் அகர்வால்!

பெரிய அளவிலான பர்பாமென்ஸ் இல்லை என்றபோதும், எப்படியோ முன்னணி நடிகை இடத்தை எட்டிப்பிடித்து விட்டார் ஹன்சிகா. அதோடு முன்னணி நடிகர்க
ளின் படங்களாகவும் கைவசம் வைத்திருக்கிறார். அதிலும் சில நடிகர்கள் ஹன்சிகா வேண்டும் என்று அவருக்காக நேரடியாகவே சிபாரிசு செய்கிறார்களாம். அதன்காரணமாக, இங்குள்ள நடிகைகள் ஹன்சிகாவை நெருங்கவே முடியாத அளவுக்கு வளர்ந்து நிற்கிறார். அதோடு, அவருக்கு போட்டியாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அமலாபால், சமந்தா போன்ற நடிகைகளும் தெலுங்கு தேசத்தில் ஐக்கியமாகி விட்டதால், இப்போது போட்டியே இல்லாத களத்தில் வாள் வீசிக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா.ஆனால், அவருக்கு ஆபத்து காஜல் உருவத்தில் விரைவில் வரப்போகிறது, துப்பாக்கியைத் தொடர்ந்து ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா படங்களில் நடிக்கும் அவர், அடுத்து மேல்தட்டு ஹீரோக்களின் படங்களை வலைவீசி பிடிக்கும் முயற்சியில் தீவிரமடைந்திருக்கிறார். மும்பையில் முகாமிட்டிருந்தாலும், அங்கிருந்தபடியே அபிமானிகளுக்கு அடிக்கடி போன் போட்டு படவேட்டை நடத்தி வருகிறார். இதில் சில முன்னணி ஹீரோக்கள் காஜல் பக்கம் சாய்ந்திருப்பதால், ஹன்சிகாவுக்கு செல்லவிருந்த புதிய படங்கள் அவர் பக்கம் திரும்பி நிற்கின்றன. அதனால் அந்த படங்களை காஜல் கைப்பற்றி விட்டால், அடுத்த ரவுண்டில் படங்களே இல்லாத நிலைக்கு தள்ளப்படுவார் ஹன்சிகா.