காதலிருந்தும் பெண்கள் ஏன் காதலை ஏற்க மறுக்கின்றனர்?

காதல் இல்லாத ஒருவரைக் கூட இந்த உலகில் பார்க்க முடியாது. அந்த அளவில் அது ஒரு உன்னதமான ஒரு தெய்வீக உணர்வு. இவ்வாறு காதல் செய்பவர்களில் அதிகம் யோசிப்பவர்கள் யார் என்று பார்த்தால், அது பெண்கள் தான். ஏனெனில் அவர்களுக்கு சற்று பயம் அதிகம். அந்த பயத்தால் தான் அவர்கள் தனக்கு காதல் இருந்தாலும், அதை வெளிப்படுத்த தயங்குகிறார்கள்.மேலும் பெண்களின் மனமானது ஒரு பூ போன்றது. அதில் அவர்கள் எப்போதும் சந்தோஷம் வேண்டும் என்று தான் விரும்புவார்கள். மேலும் அவர்கள் மனதில் ஒரு சில கேள்விகள், சந்தேகங்கள் எழுவதாலும் அவர்கள் வெளிப்படுத்த மறுக்கிறார்கள். சரி, இப்போது பெண்கள் எதனால் தங்கள் காதலை ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர் என்ற உண்மையை அனுபவசாலிகள் கூறுகின்றனர். அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்



களேன்…பெண்களின் காதலில் முதலில் தடையாக இருப்பது அவர்களது பெற்றோர்கள் தான். ஏனெனில் இத்தனை நாட்கள் தன்னை பெற்று வளர்த்தெடுத்த பெற்றோர் தன் காதலை ஒப்புக் கொள்ளவில்லையெனில் என்ன செய்வது என்ற ஒரு பயம், எப்போதுமே அவர்களது மனதில் இருக்கும். இதனால் அவர்கள் தங்கள் மனதில் காதல் இருந்தாலும், அதனை வெளிப்படுத்தாமல், மனதிலேயே வைத்துக் கொள்வர்.பொதுவாக பெண்கள் காதல் செய்துவிட்டால், காதலிப்பரையே மணக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அது நடக்காவிட்டால், பின் அவர்கள் மனதை கல்லாக்கிக் கொண்டு பெற்றோர் சொல்பவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் வேண்டுமா என்று நினைத்து, அந்த காதலை மனதிலேயே புதைத்துவிடுவர்.நமது சமுதாயம் கூட பெண்களின் காதலை வெளிப்படுத்துவதற்கு ஒருவித தடையாக உள்ளது என்றும் சொல்லலாம். ஏனெனில் நமது சமுதாயத்தில் ஜாதி, மதம் போன்றவற்றை அதிகம் பார்ப்பது வழக்கம். இதனால் எவரும் விரும்பியவர்களை மணக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதிலும் ஒரு இந்து பெண், கிறித்துவ ஆணை மணந்துவிட்டால், அந்த சமுதாயம் அதனை வித்தியாசமாக பார்ப்பதோடு, தவறாக பேசுவதால், வீட்டில் இருக்கும் பெற்றோர்களும் அவர்களை ஏற்க மறுகின்றனர். இதுவும் பெண்களின் காதலுக்கு தடையாக உள்ளது. ஆண்கள் தைரியத்துடன் பார்க்கலாம் என்று இருப்பார்கள். ஆனால் பெண்கள் அத்தகையவர்கள் அல்ல.சில பெண்கள் தைரியத்துடன் காதலித்து தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருப்பார்கள். ஆனால் சில ஆண்கள் காதலித்து மணப்பதற்கு தைரியமின்றி, காதலித்தப் பின் அவர்களை விட்டு போய்விடுவார்களோ என்ற எண்ணத்தில், காதல் தனக்கு வந்தாலும் மனதை கல்லாக்கிக் கொண்டு வெளிப்படுத்த தயங்குவார்கள். இந்த விஷயத்தில் பெண்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.மேற்கூறிய காரணங்களாலேயே பெண்கள் தங்கள் மனதில் காதல் மலர்ந்தாலும், அவற்றை மறைத்து மனதிலேயே புதைத்துவிடுகின்றனர்.

வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் நடிகைகள் : சனாகான் அதிரடி

தமிழில் பிரபல கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஈஸ்ட்மென் ஆண்டனி கதை எழுத, அனில் இயக்கியிருக்கிற படம் ‘கிளைமாக்ஸ்’. இந்த படம் தமிழில் நடிகையின் டைரி என்ற பெயரில் வெளியாக உள்ளது. தமிழில் எச்ஏகே தயாரிப்பில் இயக்குனர் ஆதிராம் நிர்வாக தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த ‘நடிகையின் டைரி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் அனில், நிர்வாக தயாரிப்பாளர் ஆதிராம், நடிகை சனாகான், தயாரிப்பாளர் கேயார் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் நடிகை சனாகான் பேசுகையில், நான் எப்போதுமே நல்ல கதைகளை மட்டுமே தேடிப்பிடித்து நடிக்கிறேன். எதற்காகவும் யாருக்காகவும் நான் வளைந்து கொடுப்பதில்லை. தைரியசாலியான பெண்.இந்த படம் ஒரு நடிகையின் வாழ்க்கையை பற்றியது என்பதால் மிகுந்த ஈடுபாட்டோடு நடித்தேன். நடிகை சில்க்கின் படங்களை பார்த்தேன். அவரின் உடல் அசைவுகள்,


நடை, உடை, பாவனைகளை கவனமாக பார்த்து அதன்படியே சில காட்சிகளில் நடித்திருக்கிறேன். உண்மையில் நடிகையாக இருப்பது ரொம்ப கஷ்டமான விடயம் என்றாலும் வாய்ப்புக்காக நான் எங்கும் போவதில்லை. சில நடிகைகள் வாய்ப்புகளுக்காக படுக்கையை பகிர்ந்துகொள்ளக்கூட தயங்குவதில்லை. அது அந்த நடிகைளின் தனிப்பட்ட விருப்பம். சூழ்நிலைகளைப் பொறுத்து நடிகைகள் இதுபோன்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.ஆனால், நான் அப்படியில்ல. அப்படி ஒரு சூழ்நிலை எனக்கு வந்ததில்லை. வாய்ப்புகளுக்காக நான் வளைந்து கொடுப்பதில்லை. இந்த படத்தை ஸ்மிதாவின் ஆவி பார்த்தாலும் என்னை வாழ்த்தவே செய்யும். அந்தளவுக்கு படத்தில் அவரைப்போலவே வாழ்ந்திருக்க முயற்சித்திருக்கிறேன். இந்த படத்தில் கவர்ச்சியாக நடித்திருக்கிறேன். நடிகையின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை மிக தெளிவாக இயக்குனர் வெளிப்படுத்தியிருக்கிறார். எனக்கு என்ன சொல்லிக் கொடுத்தாரோ அதை அப்படியே செய்திருக்கிறேன். ஆபாசமாக நடிக்கவில்லை. அப்படி நடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. நடிகை சில்க்கின் மரணம் தொடர்பாக தெளிவான காரணம் எனக்கு தெரியவில்லை. எனினும் நடிகை சில்க்கின் இறப்பு சினிமாவுக்கு பெரும் இழப்பு என்பது மட்டும் நிச்சயம் என்றும் தொடர்ந்து இதுபோன்று சவாலான வேடங்கள் வந்தால் நடிப்பேன் எனவும் கூறியுள்ளார்.
Actresses for the opportunity to share the bed