ஹன்சிகாவுக்கு உடையை குறைக்க குறைக்க குளிரவே இல்லிங்க


‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், படத்தின் இயக்குனர் சுந்தர்.சி பேசும்போது ஹன்சிகாவை ரொம்ப உயரத்துக்கு தூக்கி விட்டார். உயரம் என்றால்,


ஏறக்குறைய குஷ்பு உயரத்துக்கு!அப்படி என்னதான் சொன்னார்?“இந்த படத்தின் படப் பிடிப்பை, வேகமாக நடத்தி முடிப்பதற்கு, ஹன்சிகா ரொம்பவும் ஒத்துழைத்தார். ஷூட்டிங்கிற்காக ஜப்பான் சென்றபோது, குறைந்த உடையுடன், உறைய வைக்கும் குளிரில் நடித்து கொடுத்தார்.நான் பல நடிகைகளை வைத்து படம் இயக்கியிருக்கிறேன். இப்படி, ஒத்துழைப்பு யாரும் கொடுத்ததில்லை. ஹன்சிகாவை குட்டி குஷ்பு என்கின்றனர். உருவத்தில் மட்டுமல்ல… நல்ல நடிகை என்ற விஷயத்திலும், என்னை ஹன்சிகா கவர்ந்துவிட்டார். குஷ்புவுக்கு பிறகு, எனக்கு பிடித்த ஒரே நடிகை ஹன்சிகாதான்னு, சத்தியம் கூட பண்ணுவேன்” என, உருகி உருகிக் கூறினார்.சும்மாவே சுந்தர்.சி படத்தில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படுவது ‘குறைந்த’ உடைதான்! இவர் ஹன்சிகாவின் குறைந்த உடை பற்றி குறிப்பிட்டு சொல்கிறார் என்றால், இந்தம்மா அப்டி என்னதான் உடை அணிந்தாங்களோ!