3 மாத ‘செக்ஸ் பட்டினி’ முடிவுக்கு வந்த குஷி.. எதிராளியை போட்டுப் புரட்டிய பாக்ஸர்!


england-boxer-froch1-6003 மாதமாக தனக்கு தனது காதலி விதித்திருந்த செக்ஸ் தடை முடிவுக்கு வந்த உற்சாகத்தில், முதல் நாள் இரவு மனைவியுடன் செம குஷியாக இருந்து விட்டு, அடுத்த நாள் காலை நடந்த குத்துச்சண்டைப் போட்டியில் எதிராளியைப் போட்டு புரட்டி எடுத்து விட்டார் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் கார்ல் பிரோச்.
இவரிடம் சிக்கி பிழியப்பட்ட வீரரின் பெயர் மிக்கேல் கெஸ்லர் ஆவார்.



35 வயதான ராச்சல் கார்டிங்ளியின் காதலர்தான் பிரோச். ராச்சல் ஒரு மாடல் அழகி ஆவார். இவரை கடந்த 3 மாதமாக காயப்போட்டு வைத்திருந்தாராம் ராச்சல். ஒரே வீட்டில் இருந்தாலும் கூட கடந்த 3 மாதமா நோ செக்ஸ்.. நோ விளையாட்டு. தனித் தனி படுக்கைதானாம். பலமுறை வாய் விட்டு கெஞ்சியும் கூட ராச்சல் இறங்கி வரவில்லையாம்.
மனுஷன் செமத்தியாக காய்ந்து போய் விட்டார். இந்த நிலையில் டென்மார்க் நாட்டு வீரர் கெஸ்லருக்கும், பிரோச்சுக்கும் இடையிலான முக்கியமான சாம்பியன் போட்டி கடந்த சனிக்கிழமை நடந்தது. இதில் தான் வெற்றி பெற வேண்டும், எனவே சக்தி கொடு சக்தி கொடு என்று பாபா பட ரஜினி பாணியில் காதலியிடம் கெஞ்சிப் பிணாத்தியுள்ளார் பிரோச்.
அதைப் பார்த்த ராச்சல் மனம் இறங்கி போனால் போகிறதென்று இரவு விளையாட்டுக்கு ஓ.கே. சொன்னார். அவ்வளவுதான் மனுஷன் 3 மாத பசியை அன்றைய இரவு முழுவதும் சிறப்பாக பசியாறி விட்டாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில் படுக்கை அறையில் அன்று தீப்பொறி பறந்தது. வான வேடிக்கை நிகழ்த்தி விட்டேன். ரொம்ப நாளைக்குப் பிறகு ஈடுபட்டதால் மிக மிக உற்சாகமாக இருந்தேன். ராச்சலும் சந்தோஷமடைந்தார்.
ராச்சல் மிகவும் அழகானவர். அவரை எனக்கு ரொம்ப் பிடிக்கும். ஆனால் 3 மாதமாக பட்டினி போட்டதால் சற்றே சோர்வடைந்து விட்டேன். இருப்பினும் ஒட்டுமொத்தமாக அன்றைய இரவில் தீர்த்து விட்டேன். இந்த குஷியில்தான் அடுத்த நாள் கெஸ்லரை என்னால் வீழ்த்த முடிந்தது… என்றார் உற்சாகமாக.
முதல் நாள் இரவில் தன்னிடம் விளையாடி விட்டு, அடுத்த நாள் கெஸ்லரைப் புரட்டி எடுத்து விட்ட பிரோச்சைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம் ராச்சல். இந்தக் காதல் ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபடியும் தடை வராதுன்னு உறுதியா சொல்லலாம்….!