ஆபாசமாக காட்டப்பட்ட குளியல் காட்சி : நடிகை அருந்ததீ கதறல்!


அருந்ததீ நீச்சல் உடையில் குளிப்பது போல உள்ள காட்சிகள் இன்டர்நெட்டுகளில் ஆபாசமாக இருப்பதைப் பார்த்த நடிகை அருந்ததீ ‘நேற்றுஇன்று’ படத்தின் டைரக்டருடன் சண்டை போட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஏஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்ட் செய்த ‘வெளுத்துகட்டு’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் அருந்ததீ. தொடர்ந்து



‘போடிநாயக்கனூர் கணேசன்’ ‘சுண்டாட்டம்’ ஆகிய படங்களில் நடித்த இவர் தற்போது , ‘நேற்று இன்று’ என்ற புதிய படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.டைரக்டர் பத்மாமகன் இந்தப்படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இவர் ஏற்கனவே பார்த்திபன் நடித்த அம்முவாகிய நான் என்ற படத்தை டைரக்ட் செய்தவர். மேற்படி நேற்றுஇன்று படத்தில் அருந்ததி நீச்சல் உடையில் குளிப்பது போன்ற கவர்ச்சி படங்கள் சமீபத்தில் இன்டர்நெட்டுகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. மேலும் அருந்ததீ நான்கைந்து ஆண்களுடன் நீச்சல் உடையில் மிக நெருக்கமாக இருப்பது போன்ற படங்களும் வந்துள்ளன. முதலில் இதை வெறும் கவர்ச்சி என்று நம்பி அந்தக்காட்சியில் எந்த கூச்சமும் இல்லாமல் நடித்த அருந்ததி இப்போது அந்த சீன்கள் மிக ஆபாசமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.கவர்ச்சி என்ற பெயரில் தன்னை ஆபாசமாக படம்பிடித்து விட்டதாக டைரக்டர் பத்மாமகனிடம் அவர் கடுமையாக சண்டை போட்டாராம் அருந்ததீ. அது மட்டுமில்லாமல் அதே கோபத்தில் படத்தின் பப்ளிசிட்டி நிகழ்ச்சிகளிலும் அருந்ததீ பங்கேற்காமல் புறக்கணித்து விட்டாராம். அருந்ததீயின் குளியல் படங்களை இன்டர்நெட்டுகளில் பார்த்து பரவசமடைந்த மற்ற டைரக்டர்களும் தங்கள் படங்களில் அதுபோல் கவர்ச்சி காட்டும்படி நிர்ப்பந்திக்கிறார்களாம். இதனால் தன் நிலைமையை நினைத்து தனியாக உட்கார்ந்து கதறிக் கதறி அழுகிறாராம் அருந்ததீ.