ஸ்ருதியின் அதிரடி கவர்ச்சி பிரவேசத்தால் தெலுங்கு முன்னணி நடிகைகள் அதிர்ச்சி.(photos)

ஏழாம் அறிவு, 3 படங்களில் நடித்த ஸ்ருதிஹாசனுக்கு அதன்பிறகு தமிழ் சினிமா கைகொடுக்கவில்லை. ஆனால், ஆந்திர சினிமாவில் அவர் நடித்த இரண்டொரு படங்கள் மெகா ஹிட்டாகவே அங்கு
அமோகமாக வரவேற்பு கொடுத்து விட்டனர். தற்போது அவரது கைவசம் 4 படங்கள் உள்ளன. மேலும் புதிய படங்களுக்கு பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். அந்த வகையில் அங்குள்ள முக்கிய ஹீரோக்களான, ரவிதேஜா, ஜூனியர் என்டிஆர், ராம்சரண்தேஜா ஆகியோரின் படங்களாக இருப்பதால், இந்த படங்களில் ஒன்றிரண்டு வெற்றி பெற்றாலும், அடுத்து டோலிவுட்டில் நம்பர்ஒன் நடிகையாகி விடுவார் ஸ்ருதி. அதற்கான அறிகுறி அவருக்கு தெரியத் தொடங்கி விட்டதால், பெரிய படங்களாக செலக்ட் பண்ணி வருகிறார்.
இந்த சமயத்தில், இந்தியில் தான் இயக்கியுள்ள ராமையா வஸ்தா வையா படத்தில் ஸ்ருதி நடித்தால் அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதிய பிரபுதேவா, அவரது கால்சீட்டை அட்ஜஸ்ட் பண்ணி வாங்கி இப்போது படத்தையும் முடித்து விட்டார். அதனால் அடுத்தபடியாக ஐதராபாத்துக்கு முகாமை மாற்றி விட்டார் ஸ்ருதிஹாசன். ஆக, முழுநேர தெலுங்கு நடிகையாகியிருக்கிறார்.
இதையடுத்து அங்கு மார்க்கெட்டில் இருக்கும் சில நடிகைகள் ஸ்ருதியின் அதிரடி பிரவேசத்தால் நாம் ஆட்டம் கண்டு விடுவோமோ என்ற கலக்கத்தில் கொழுகொம்பு ஹீரோக்களின் அரவணைப்பை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.