குளிர்பானத்தில்,
மயக்க மருந்து கலந்து கொடுத்து, பெண்ணை கற்பழித்து, புகைப்படம் எடுத்து
மிரட்டியவரை, போலீசார் தேடி வருகின்றனர். கோவை, லங்கா கார்னரை சேர்ந்தவர்
முத்துகிருஷ்ணன். இவரது மனைவி விஜயா, 48. தனியாக டூவீலர் டிரைவிங் கற்றுக்
கொடுத்து வருகிறார்.
கோவில்களுக்கு, பூக்கள் கொடுத்து சில்லரை
வியாபாரமும் செய்து வருகிறார். செல்வபுரத்தை சேர்ந்த மொத்த பூ வியாபாரி,
சண்முகசுந்தரம், 47, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தினமும்,
மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள பூ மார்கெட்டில், சண்முக சுந்தரத்திடம்
பூக்களை கொள்முதல் செய்வதை, விஜயா வழக்கமாக கொண்டிருந்தார்.
கடந்த ஆண்டு, செப்., மாதம் 25ம் தேதி, பூ வாங்க வந்த விஜயாவுக்கு, மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார்.
மயங்கிய விஜயாவை, சூலூர் பகுதிக்கு கடத்தி சென்று, கற்பழித்ததாக
கூறப்படுகிறது. அவரை நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டி, ஆறு மாதங்களாக
பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று, கற்பழித்து வந்ததாகவும் தெரிகிறது.
சம்பவம் குறித்து, மகளிர் போலீசிடம் விஜயா
புகார் கொடுத்தார். போலீசார், வழக்கு பதிவு செய்து, தலைமறைவான சண்முக
சுந்தரத்தை தேடி வருகின்றனர்.


















































