ஒரு காட்சியைப் படமாக்கும்போது இயக்குநர் பிரபுதேவாவுடன் பேசிக் கொண்டே நடந்து வந்தபோது சட்டென்று நீரில் வழுக்கி விழுந்தார் ஸ்ருதி.
அவருக்கு காலில் லேசான அடியும், சுளுக்கும் ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
பூரண ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அன்றைய படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அடுத்த நாள் வழக்கம் போல ஷூட்டிங்குக்கு வந்தார் ஸ்ருதி.